கொழும்பில் அதிரடியாக சோதனைக்குட்படுத்தபட்ட விற்பனை நிலையம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
சருமத்தை வெண்மையாக்கும் பொருட்கள் மற்றும் தரமற்ற மருந்துகள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பு – புறக்கோட்டை கதிரேசன் வீதியிலுள்ள அழகுசாதன பொருட்கள் விற்பனை நிலையமொன்று நுகர்வோர் விவகார அதிகார சபையினரால் சோதனைக்குட்படுத்தபட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை
இதன்போது குறித்த விற்பனை நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி தரமற்ற மருந்துகள் மற்றும் சருமத்தை வெண்மையாக்கும் பொருட்கள் என்பவற்றை விற்பனை செய்தமை தெரியவந்துள்ளது.

சட்டவிரோதமான மருந்துகள் மற்றும் சர்மத்தை வெண்மையாக்கும் கிறீம் வகைகள் என்பன கைப்பற்றப்பட்டு, அதிகாரிகளால் எடுத்தது செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்த விடயம் தொடர்பாக எதிர்காலத்தில் விற்பனை நிலையத்தின் உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan