பிட்டு - இடியப்பம் விற்பனை செய்தவரின் மாடித் தோட்டம்! சுற்றிவளைத்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
கல்முனை பகுதியில் உள்ள வீட்டின் மொட்டை மாடியில் சூட்சுமமான முறையில் கஞ்சா செடி வளர்த்து வந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று(19.08.2026) கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்முனை - கடற்கரை பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மாடியிலேயே குறித்த கஞ்சாப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரகசிய தகவல்
அம்பாறை மாவட்ட புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே, சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியொன்றில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவரிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது, குறித்த கஞ்சா பயிர்ச்செய்கை தொடர்பான தகவல்கள் கசிந்துள்ளன.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே, பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டதோடு, சந்தேகநபர் காலை மற்றும் மாலை வேளைகளில், இடியப்பம், பிட்டு போன்ற உணவுகளை விற்பனை செய்யும் போர்வையில் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளமையும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட கஞ்சாச் செடிகளை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 2 நாட்கள் முன்
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் மலர்ந்த காதல் - கேரள பெண்ணை திருமணம் செய்த ஸ்காட்லாந்து எம்.பி News Lankasri
தண்ணீரிலேயே வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட சிறுவன்: வைரல் வீடியோவை பார்த்து உதவிய அனந்த் அம்பானி Manithan