கொழும்பில் பொலிஸார் போன்று நடித்து பொது மக்களை ஏமாற்றும் கும்பல்
கொழும்பின் புறநகர் பகுதியான கெஸ்பேவ பிரதேசத்தில் இரவு வேளையில் வீதித் தடையைப் பயன்படுத்தி வீதியில் பயணிப்பவர்களிடம் பொலிஸார் போன்று நடித்து சோதனையில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கெஸ்பேவ பொலிஸ் நிலைய தலைமை அதிகாரிகள் குழுவொன்றைப் போன்று நடித்து, குறித்த நபர்கள் இந்தச் செயலை மேற்கொண்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் கெஸ்பேவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் வந்த இரு மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
ரோந்து பணி
முச்சக்கர வண்டியில் இரவு வேளையில் நடமாடும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் வீதியில் மக்கள் குழுவொன்றை நிற்பதை அவதானித்துள்ளனர். அவர்கள் அந்த இடத்தை அடைந்ததும் அங்கிருந்த 3 பேரும் தப்பி ஓடியுள்ளனர்.
உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார், தப்பியோடிய மூவரையும் பின்தொடர்ந்து சென்று அவர்களில் இருவரை உடனடியாக கைது செய்துள்ளனர்.
இருவரையும் கைவிலங்கிட்டு அவர்கள் இருந்த இடத்துக்கு அழைத்துவரப்பட்டனர். “நான் ஒரு கொத்தனார். நான் கொசுவர்த்தி சுருள் வாங்க கடைக்கு சென்று கொண்டிருந்தேன்.
அடையாள அட்டை
இந்த மூவரில் ஒருவர் தான் கெஸ்பேவ பொலிஸ் நிலையத்தின் OIC என்று கூறி தன்னை நிறுத்தயதாகவும் தனது அடையாள அட்டையை ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டதாகவும் பாதிக்கப்பட்டவர் குறிப்பிட்டுள்ளார்.
இவர்கள் பொலிஸார் போன்று நடித்து பொது மக்களை ஏமாற்றி பணம் பறிப்பதாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மூவரும் 35 மற்றும் 45 வயதுடையவர் எனவும் சந்தேகநபர்கள் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.