யாழில் தாக்குதலுக்கு தயாரான கும்பல் அதிரடி கைது! தீவிரப்படுத்தப்படும் விசாரணை
யாழ்ப்பாணம் - சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வைத்து வன்முறை குழுவை சேர்ந்த மூவர் வாள்களுடன் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று(16.04.2026) இடம்பெற்றுள்ளது.
வாள்களுடன் மூவர் கைது
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த மூவரும் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் தாக்குதல் நடாத்துவதற்கு தயாராகிக் கொண்டிருப்பதாக சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, அதிரடி நடவடிக்கையை மேற்கொண்ட பொலிஸார், அந்த தாக்குதலை முறியடித்து குறித்த சந்தேகநபர்கள் மூவரையும் மூன்று வாள்களுடன் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
உத்தரவிடப்பட்டால் பெரும் தாக்குதல்! தயார் நிலையில் அமெரிக்கப் படைகள் - ஈரானுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடு
YOU MAY LIKE THIS VIDEO
புடினுக்கு எதிரான ஆட்சிக்கவிழ்ப்பு அச்சம் தீவிரம்: ரஷ்யாவின் ஆளும் வர்க்கத்தினர் சதித்திட்டம் News Lankasri
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் அடுத்து வரப்போகும் கதைக்களம்... வீடியோவுடன் இதோ Cineulagam
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri