இலங்கை அகதிகளுக்கான குடியுரிமை வழங்க அழுத்தம் கொடுப்பேன்..! விஜய் வாக்குறுதி
இந்தியாவில் TVK கட்சியின் தலைவரும், இந்தியத் திரைப்பட நடிகருமான தளபதி விஜய், தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் 23ஆம் தேதி நடைபெறவிருக்கும் தமிழக மாநிலத் தேர்தலுக்காக அவர் இந்தத் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை அகதிகளுக்கான குடியுரிமை
மேலும், இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கவும், இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்களின் உரிமைகளை உறுதி செய்யவும் இந்திய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பேன் என அவர் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கச்சத்தீவுப் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்திய கடற்றொழிலாளர்கள் சுதந்திரமாக கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான உரிமையை மீண்டும் நிலைநாட்ட விரும்புவதாகவும் அவர் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த கடையை கொண்டுபோய் சுடுகாடு பக்கத்துல வைங்க.. CM விஜய்க்கு நடிகர் பார்த்திபன் கொடுத்த ஐடியா Cineulagam
பூசத்தில் குரு பெயர்ச்சி ... அடுத்த 6 மாதங்கள் இந்த ராசியினரின் நிதி நிலையில் அசுர வளர்ச்சி உறுதி! Manithan