ஓட்டமாவடியில் சட்டவிரோத மணல் கடத்தல் செயற்பாடுகளில் ஈடுபட்ட கும்பல் கைது
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி பகுதியில் வைத்து சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த நான்கு சந்தேகநபர்களும், இரண்டு கனரக இயந்திரங்கள் மற்றும் இரண்டு உழவு இயந்திரம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன இன்று தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாகனேரி மற்றும் புணாணை ஆகிய பகுதியிலிருந்து சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வருவதாக வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதன்போது ஓட்டமாவடி பகுதியில் வைத்து சட்டவிரோதமான முறையில் வாகனேரி மற்றும் புணாணை பகுதியிலிருந்து மணல் ஏற்றி வந்த நான்கு சந்தேக நபர்களும், இரண்டு கனரக இயந்திரங்கள்,இரண்டு உழவு இயந்திரங்கள் என்பன கைப்பற்றப்பட்டன.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத மண் அகழ்வு மற்றும் சட்டவிரோத மரம் கடத்தல் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், அதனை தடுப்பதற்கு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் விசேட குழு ஒன்று செயற்பட்டு வருவதாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்துள்ளார்.











1000 கிமீ தூரத்தை அடையும் சீன ஹைப்பர்சோனிக் ஏவுகணை: இந்தியா உள்பட பல நாடுகளுக்கு எச்சரிக்கை News Lankasri

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
