கொழும்பு நீதிமன்ற படுகொலை! பின்னணியில் இந்தியா
பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் குற்றவியல் கும்பல் தலைவருமான சஞ்சீவ குமார சமரரத்ன, அல்லது "கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்ட சம்பவமானது தற்போது பேசுபொருளாகியுள்ளது.
நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றுள்ள இந்த படுகொலை தொடர்பில் பல விமர்சனங்களும் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், இந்திய உளவுத்துறை கணேமுல்ல சஞ்சீவ படுகொலையின் பின்னணியில் இருக்கலாம் என்ற கோணத்தில் ஊடகப்பரப்பில் பேசப்பட்டு வருகின்றன.
இந்தியாவின் நலன்களுக்கு எதிரான ஆட்சி அதன் அண்டை நாடுகளில் அமையப்பெற்றால் இந்தியாவின் புலனாய்வுப்பிரிவு அதில் தலையிடும் என்பது உலக நியதி. 2019ஆம் ஆண்டில் இலங்கையில் நடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலிலும் இந்திய உளவு அமைப்பு இருந்ததான சந்தேகத்தை முன்னாள் ஜனாதிபதியொருவர் குறிப்பிட்டிருந்தார்.
தற்போதைய அநுர அரசாங்கம் முழுமையாக சீனாவின் பக்கம் செல்ல ஆரம்பித்திருப்பது இலங்கையின் வர்த்தகத்திலிருந்து இந்தியாவின் அதானி குழுமம் திடீரென்று விலகிச்சென்றிருப்பது என இலங்கையில் ஏற்பட்டு வருகின்ற பல மாற்றங்கள் இந்தியா ஏதோவொரு விடயத்தில் தனது எதிர்பினை வெளிப்படுத்த போகின்றது என்ற அச்சம் இலங்கை மக்கள் மத்தியில் அண்மைகாலங்களில் ஏற்பட்டு வருகின்றது.
இது தொடர்பில் விரிவாக அலசி ஆராய்கின்றது ஐபிசியின் உண்மையின் தரிசனம்....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |