சஞ்சீவ படுகொலை விவகாரம்! பொலிஸ் அதிகாரிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியை மார்ச் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தியவரை அழைத்து சென்றதான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வானின் ஓட்டுநரை தடுத்து வைத்து பொலிஸார் விசாரிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் கொழும்பு குற்றப்பிரிவால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கணேமுல்ல சஞ்சீவ
கணேமுல்ல சஞ்சீவ படுகொலை விவகாரம் தொடர்பில் பொலிஸ் அதிகாரி ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவர், பதெனிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் எனவும், குறித்த பொலிஸ் அதிகாரி நீர்கொழும்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வருவதாகவும், குற்றப்பிரிவில் நீதிமன்றக் கடமைகளைச் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பொலிஸ் அதிகாரி, சம்பவம் தொடர்பாக தற்போது தலைமறைவாக உள்ள சந்தேக நபரான பிங்புர தேவகே இஷார செவ்வந்தி வீரசிங்க என்ற பெண்ணுடன் ஒரு குறிப்பிட்ட நட்பைக் கொண்டிருந்தார் என்பதும், அவருடன் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டுள்ளமையும் தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

மறைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணனுக்காக சூப்பர் சிங்கர் மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்... வீடியோ இதோ Cineulagam
