கொலைக்காக திட்டம் தீட்டிய கும்பலின் பின்னணி! வெளிநாடு தப்பி செல்ல ஏற்பாடு - மாயமான பெண் எங்கே...!
கனேமுல்லே சஞ்சீவவை சுட்டுக் கொன்ற சந்தேகநபர், கொலைக்குப் பிறகு கல்பிட்டிக்கு தப்பிச் செல்லும்போது வெளிநாடுகளுக்கு மூன்று அழைப்புகளை மேற்கொண்டதாக கொழும்பு குற்றப்பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.
வெளிநாட்டில் வசிக்கும் கெஹெல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த மற்றும் அச்சிந்த ஆகிய மூன்று இலங்கை பாதாள உலககுழு உறுப்பினர்கள் இந்த அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கொலைக்கான ஏற்பாடுகள்
மகரகமவைச் சேர்ந்த சமிந்து தில்ஷான் பியுமாங்க கண்டனாராச்சி என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர், 15 மில்லியன் ரூபாய் பணத்திற்கு ஒப்பந்தக் கொலையைச் செய்ததாக புலனாய்வாளர்களிடம் கூறியுள்ளார்.
கொலைக்கான ஏற்பாடுகள் நடந்த காலப்பகுதியில் அவர் கடுவலையில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தார்,
அங்கு ஒப்பந்ததாரர்களால் போலியான இலங்கை வழக்கறிஞர்கள் சங்க அடையாள அட்டை வழங்கப்பட்டது. கொழும்பிலிருந்து கல்பிட்டிக்கு தப்பிச் செல்லும் வேன் மற்றும் அங்கிருந்து இந்தியாவுக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளும் அவர்களால் செய்யப்பட்டிருந்ததாக கொழும்பு குற்றப்பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.
சந்தேக நபரின் கையடக்க தொலைபேசி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அதிலிருந்து எடுக்கப்பட்ட அழைப்பு விாரங்களை புலனாய்வாளர்கள் ஆராய்ந்து வருவதாகவும் குற்றப்பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.
இளம் பெண் மாயம்
இதேவேளை கொலையுடன் தொடர்புடைய மற்றைய பெண்ணை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
24 வயதான செவ்வந்தி என்ற பெண் வெளிநாடுகளிலுள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பல் கடத்தல் தலைவர்களுடன் நெருக்கமானவர் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண் திட்டமிட்டபடி இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

அம்பானியை அடுத்து... ஆசியாவின் இரண்டாவது பெரும் கோடீஸ்வர குடும்பம்: அவர்களின் சொத்து மதிப்பு News Lankasri

மாஸ் வரவேற்பு பெற்றுள்ள டிராகன் படத்திற்காக பிரதீப் வாங்கிய சம்பளம்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam

இந்தியாவில் இன்றும் பிரிட்டிஷுக்கு கீழே இயங்கும் ஒரே ஒரு ரயில் நிலையம்.., எது தெரியுமா? News Lankasri
