கனேமுல்லை கொலை சம்பவம் - துப்பாக்கிதாரியின் காதலி கைது
பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் சஞ்சீவ குமார சமரரத்னே எனப்படும் "கணேமுல்ல சஞ்சீவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரின் காதலி கைது செய்யப்பட்டுள்ளார்.
மஹரகம பகுதியில் தலைமறைவாகி இருந்த நிலையில் சற்று முன்னர் பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் மேலதிக விசாரணைக்காக கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
தப்பிச் செல்ல முயற்சி
"கணேமுல்ல சஞ்சீவவை கொலை செய்த பின்னர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நாட்டை விட்டு தப்பிச் செல்லும் நோக்கில் குறித்த பெண்ணை நீர்கொழும்புக்கு அழைத்துச் செல்வதற்காக நபர் ஒருவர் சென்ற வேளையில், சுற்றிவளைத்த பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.
மேல் மாகாண தெற்கிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் கயங்க மாரப்பனவின் அறிவுறுத்தலின் பேரில் இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மாஸ் வரவேற்பு பெற்றுள்ள டிராகன் படத்திற்காக பிரதீப் வாங்கிய சம்பளம்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam

ஜெலென்ஸ்கியை நாட்டை விட்டே துரத்த ட்ரம்ப் திட்டம்: போர் வெற்றியை அறிவிக்கவிருக்கும் ரஷ்யா News Lankasri
