நாட்டில் நடைமுறைக்கு வந்துள்ள அரசாங்கத்தின் புதிய திட்டம்!
பொலித்தீன் பிளாஸ்டிக்கால் மனிதர்களுக்கும் முழு சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் பாதிப்பைத் தடுக்கும் நோக்கத்துடன் அரசாங்கத்தினால் புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
‘க்ளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்துடன் இணைந்து, மத்திய சுற்றாடல் அதிகாரசபை இந்த புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
பிரச்சாரம்
அதன்படி, சுற்றாடல் அதிகாரசபை, சுற்றுச்சூழல் பொலிஸ் பிரிவு மற்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபையுடன் இணைந்து கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் ஒரு பிரச்சாரத்தை நடத்தியுள்ளது.
பொலித்தீன் பிளாஸ்டிக்கை தவறாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் பேரழிவு குறித்து உற்பத்தியாளர்கள், கடை உரிமையாளர்கள், கடை ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த பிரச்சாரம் நடத்தப்பட்டுள்ளது.
இதேவேளை 45 வியாபார நிலையங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் சுமார் 860 கிலோகிராம் சட்டவிரோத பொலித்தீன் ‘லஞ்ச் ஷீட்கள்’ பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.