கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் : மேலும் இருவர் கைது
கணேமுல்ல சஞ்சீவ (Ganemulla Sanjeewa) கொலைச் சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கொழும்பு குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களில் ஒருவர் டொன் ஜனக உதய குமார என்ற நபர் ஆவார்,
இவர் கடுவெலவிலிருந்து கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரை கொண்டு சென்ற ஓட்டுநர் என்று கூறப்படுகிறது.
இதுவரை 5 பேர் கைது
மற்றைய சந்தேக நபர் அதுருகிரிய பொலிஸ் பிரிவைச் சேர்ந்த ஹசித ரோஷன் என்ற பொலிஸ் அதிகாரி என்பது தெரியவந்துள்ளது.
இந்த சந்தேக நபர்கள் இன்று (22) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், மார்ச் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட உள்ளனர்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகள் குறித்த அறிக்கையையும் பொலிஸார் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
அதன்படி, இந்தக் கொலை தொடர்பாக இதுவரை 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |