முப்படை தலைமை தளபதியை பதவி நீக்கிய டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அந்நாட்டு முப்படை தலைமை தளபதியை பதவியிலிருந்து விலக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இதுமட்டுமில்லாமல் கடற்படை தலைமை தளபதி மற்றும் விமானப்படை துணை தலைமை தளபதியையும் பதவி நீக்கியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப்(Donald Trump) பதவியேற்றதிலிருந்து அமெரிக்காவில் பல அதிரடி மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன.
முப்படை தலைமை தளபதி
இந்நிலையில் தான் இந்த மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், முப்படைகளின் தளபதி சார்லஸ் பிரவுனிற்கு(Gen. CQ Brown) பதிலாக, விமானப்படையை சேர்ந்த லெப் ஜெனரல் ஜான் ரஸின் கைன் என்பவரை முப்படை தலைமை தளபதியாக நியமித்துள்ளார்.
இவர், ஏற்கனவே பணி ஓய்வு பெற்றவர் என குறிப்பிடப்படுகின்றது.
கடற்படை தளபதி
ட்ரம்ப் இப்படி அறிவித்த சில நிமிடங்களில், கடற்படை தளபதி அட்மிரல் லிஸா பிரான்செட்டி நீக்கப்படுவதாக, பாதுகாப்புத்துறை அமைச்சர் ஹெக்செத் அறிவித்துள்ளார்.
அதேபோல, விமானப்படை துணை தளபதியான ஜேம்ஸ் ஸ்லைப் நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |