இலங்கையர்கள் உட்பட்ட 300 பேர் பனாமாவில் தடுத்து வைப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தால் நாடு கடத்தப்பட்ட இலங்கை உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 300 பேரை பனாமா ஒரு விருந்தகத்தில் தடுத்து வைத்துள்ளது.
அவர்களை சொந்த நாடுகளுக்குத் திரும்ப ஏற்பாடு செய்யும் வரை, அங்கு அதிகாரிகளால் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், தடுத்து வைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோர், "உதவி" மற்றும் "எங்கள் நாட்டில் நாங்கள் காப்பாற்றப்படவில்லை" என்ற வாசகங்களை ஜன்னல்களின் ஊடாக கவன ஈர்ப்புக்காக வைத்திருக்கின்றனர்.
சிரமத்தை எதிர்கொள்ளும் அமெரிக்கா
ஈரான், இந்தியா, நேபாளம், இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சீனா மற்றும் பிற நாடுகள் உட்பட ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களை, நேரடியாக நாடுகடத்துவதில் அமெரிக்கா சிரமத்தை எதிர்கொள்கிறது. எனவே பனாமா ஒரு நிறுத்துமிடமாகப் பயன்படுத்தப்படுகிறது.
பனாமாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இடம்பெயர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக புலம்பெயர்ந்தோருக்கு மருத்துவ உதவி மற்றும் உணவு வழங்கப்பட்டு வருவதாக பனாமாவின் பாதுகாப்பு அமைச்சர் பிராங்க் அப்ரேகோ தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
