எதையும் செய்யாத தலைவர்கள்! பிரித்தானிய பிரதமரை கடுமையாக சாடிய ட்ரம்ப்
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் பிரான்ஸ் பிரதமர் இமானுவேல் மெக்ரோன் ஆகியோர் உக்ரைன் யுத்தத்தை நிறுத்த எதுவும் செய்யவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார்.
வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கியும் சமாதான பேச்சுவார்த்தை குறித்து எந்தவொரு நகர்வையும் மேற்கொள்வதில்லை என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப்புடன் நல்லுறவு
ஜெலன்ஸ்கி கூட்டங்களில் பங்குகொள்ளும் அளவுக்கு முக்கியமானவர் இல்லை என ட்ரம்ப் கூறியுள்ளார்.
இந்நிலையில், பிரித்தானிய அமைச்சரவை அமைச்சர் பெட் மெக்ஃபேடன் ட்ரம்ப்புடன் தங்களுக்கு நல்லுறவு இருப்பதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |