உக்ரைனை விட்டு ஜெலென்ஸ்கியை துரத்த திட்டமிடும் ட்ரம்ப்: வெற்றியை அறிவிக்கவுள்ள ரஷ்யா
உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை(Volodymyr Zelenskyy) நாட்டை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் மிரட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) பதவியேற்றதை தொடர்ந்து ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்கு கொண்டுவரப்படும் என தெரிவித்து வந்துள்ளார்.
உறவில் விரிசல்
இதன் ஒருபகுதியாக சவுதி அரேபியாவில் ரஷ்யா மற்றும் அமெரிக்க அதிகாரிகள் பேச்சுவார்த்தையும் முன்னெடுத்திருந்த நிலையில், அதற்கு உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
இதுமட்டுமன்றி அமெரிக்கா செலவிட்டுள்ள தொகைக்கு ஈடாக 500 பில்லியன் டொலர் மதிப்பிலான கனிம வளங்கள் தொடர்பான ஒப்பந்தத்தில் உக்ரைன் கையெழுத்திட வேண்டும் ட்ரம்ப் நிர்வாகம் கேட்டுள்ளது.
ஆனால், அமெரிக்கா முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்க உக்ரைன் மறுத்துள்ளதால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
ஜெலென்ஸ்கியின் நிலை
இந்த நிலையில், கிட்டத்தட்ட மூன்று வருடப் போரில் ரஷ்யா வெற்றியை பிரகடனப்படுத்த இருப்பதாக இராணுவ உளவுத்துறை தெரிவித்துள்ளது.
ஜெலெஸ்கியை சர்வாதிகாரி என ட்ரம்ப் முத்திரை குத்தியதை அடுத்து ரஷ்யாவின் பொய்கள் அனைத்தையும் நம்பும் அப்பாவி டொனால்ட் ட்ரம்ப் என உக்ரைன் பதிலளித்துள்ளது.
இந்த நிலையிலேயே, ஜனாதிபதி ட்ரம்புக்கு மிக நெருக்கமான ஒருவர் தெரிவிக்கையில், ஜெலென்ஸ்கி நாட்டை விட்டு வெளியேறி பிரான்சில் தஞ்சமடைவது தற்போதைய சூழலில் உரிய முடிவாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உக்ரைனில் தேர்தல் முன்னெடுக்கப்பட்டு புதிய தலைவர் பொறுப்புக்கு வர வேண்டும் என அமெரிக்கா விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவின் வெற்றி
உக்ரைன் இராணுவ உளவுத்துறை தெரிவிக்கையில், அடுத்த சில நாட்களில், போர் முடிவுக்கு வருவதாகவும் ரஷ்யா வெற்றி பெற்றுள்ளதாகவும் விளாடிமிர் புடின் அறிவிக்கலாம் என குறிப்பிட்டுள்ளது.
பெப்ரவரி 24ஆம் திகதி இந்த அறிவிப்பு வெளியாகலாம் என்றும் உக்ரைன் இராணுவ உளவுத்துறை குறிப்பிட்டுள்ளது.
மட்டுமின்றி, இது நேட்டோ நாடுகளுக்கு எதிரான வெற்றியாகவும் விளாடிமிர் புடின் அறிவிக்கலாம் என்றும் கூறப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |