காந்தியின் 153ஆவது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வு (Video)
மகாத்மா காந்தியின் 153ஆவது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வுகள் இன்று காலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்வில் இந்திய துணைத்தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன், யாழ்ப்பாண மாவட்ட செயலர் க.மகேசன், நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள், யாழ் மாநகர பிரதி முதல்வர், மாநகர ஆணையாளர் மற்றும் அரசியல் சமூக பிரதிநிதிகள், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், அகில இலங்கை காந்தி சேவா சங்க பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
காந்தீயம் ஏடு
இதன்போது காந்தீயம் ஏடு யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் க.மகேசனால் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் இந்திய துணைத்தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் முதல் பிரதியை பெற்றுக்கொண்டுள்ளார்.
மேலும் மகாத்மா கந்திக்கு மிகவும் பிடித்தமான “ரகுபதி ராகவ ராஜாராம்” பாடலும் மாணவர்களினால் இசைக்கப்பட்டுள்ளது.
காந்தியின் சிலைக்கு அஞ்சலி
இதேவேளை காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்வொன்று நேற்று (01.10.2022) மட்டக்களப்பு காந்திபூங்காவில் நடைபெற்றது. இதன்போது காந்தியின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ரகுபதி ராக ராஜாராம் பாடலும் இசைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் அ.செல்வேந்திரன் தலைமையில் இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இந்திய தூதுவர் கோபால் பக்லே கலந்து சிறப்பித்துள்ளார்.
காந்தியின் அகிம்சை
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன்,பிரதி முதல்வர் க.சத்தியசீலன் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.
இந்நிலையில் காந்தியின் அகிம்சை போராட்டத்தினையும் தியாகத்தினையும் மட்டக்களப்பு மக்கள் தொடர்ச்சியாக நினைவுகூருவதை எண்ணி தான் பெருமைகொள்வதாக இதன்போது இந்திய தூதுவர் கோபால் பக்லே தெரிவித்துள்ளார்.
அகிம்சையினை உலகுக்கு போதித்த மகாத்மா காந்தியின் பிறந்த தினம் காந்தி ஜெயந்தி
தினமாக அனுஸ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.











Optical illusion: படத்தில் நூற்றுக்கணக்கான “7” களில் மறைந்திருக்கும் ”9” ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan

அட்டகாசமான வசூல் வேட்டையில் சசிகுமாரின் Tourist Family பாக்ஸ் ஆபிஸ்... 7 நாளில் எவ்வளவு வசூல்? Cineulagam
