ஞானசார தேரரின் சிறை ஆடை விவகாரம்: மேல்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
கலகொட அத்தே ஞானசார தேரரின் சிறை ஆடை தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகளால் அகற்றப்பட்ட தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை பரிசீலனைக்காக எதிர்வரும் ஒக்டோபர் 22ஆம் திகதி எடுத்துக்கொள்ளுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஞானசார தேரரின் ஆடை தொடர்பாக சிறைச்சாலை அதிகாரிகளால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்கி உத்தரவு பிறப்பிக்குமாறு கோரியே இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மனுக்கள் விசாரணை
மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான அமல் ரணராஜா, மஹேன் கோபல்லவ மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மூவர் கொண்ட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் இன்று (15) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதிபதிகள் குழாம், மனுக்களை மேலதிக பரிசீலனைக்காக ஒக்டோபர் 22ஆம் திகதி அழைக்குமாறு உத்தரவிட்டது.
திணியாவல பாலித தேரர் உள்ளிட்ட பௌத்த துறவிகள் குழுவினால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
திட்டமிட்டதே நான்தான்... கனடாவில் 400 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் புதிய தகவல் News Lankasri