இலங்கை வரலாற்றில் முதன்முறையாக அநுர ஏற்படுத்தியுள்ள மாற்றம்!
இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்மாதிரியாக அமைந்துள்ளதாக பாராட்டப்பட்டுள்ளது.
முதன்முறையாக ஜனாதிபதி ஒருவரிடம் மேடை ஒன்றில் வைத்து கேள்வி கேட்கும் கலாசாரம் சமகால அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ளது.
இதன்மூலம் அரசாங்கம் அரசியலுக்கு மட்டுமன்றி, மக்கள் மயப்படுத்தப்பட்டுள்ளதாக பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.
அநுர ஏற்படுத்தியுள்ள மாற்றம்
கடந்த 12ஆம் திகதி இலங்கை வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த இலங்கை பொருளாதாரம் மற்றும் முதலீட்டு மாநாட்டில் ஜனாதிபதி கலந்து கொண்டார்.

இதன்போது ஜனாதிபதியிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு முறையான பதில்களை உடனடியாக அவர் வழங்கியுள்ளார்.
எரிபொருள் விலை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த ஜனாதிபதி, திவாலான நிலையில் இருந்து மீண்டு வரும் தொழில் முயற்சியாளர்களை பாதுகாப்பதற்காக எரிபொருள் மானியம் வழங்குவது அவசியம் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
குறித்த மாநாட்டில் ஜனாதிபதியிடம் கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் அதற்காக அவர் அளித்த பதில்கள் பலரது அவதானத்திற்குள்ளாகியுள்ளது.
மேலைத்தேய நாடுகளைப் போன்று மக்களான ஜனாதிபதியாக அநுர செயற்படுவதாக அரசியல் மட்டத்தில் அதிகம் பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan
மனைவியுடன் சண்டையை தவிர்க்க 21 வது மாடியின் பால்கனியில் இருந்து இறங்கிய கணவன்: காத்திருந்த சோகம் News Lankasri