வாழைப்பழம் சாப்பிட்ட 8 வயது சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்!
தொம்பே - கேரகல, புதுபாகல பிரதேசத்தில் வாழைப்பழம் தொண்டையில் சிக்கி 8 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பாடசாலை இடைவேளையில் வாழைப்பழம் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது தொண்டையில் சிக்கியுள்ளது.
இதனை தொடர்ந்து பாடசாலையின் ஆசிரியர்களால் தொம்பே ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கம்பஹா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கம்பஹா வைத்தியசாலையில் 5 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நான்கு சகோதரிகளைக் கொண்ட குடும்பத்தில் மூன்றாவது குழந்தையான கே.பி. கித்மினி ஹெஷாரா படிப்பிலும், ஏனைய கல்வி செயல்பாடுகளிலும் சிறந்து விளங்கியதாக அவரது பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம் நாள் திருவிழா





உக்ரைனுக்கு நேட்டோ பாணியிலான பாதுகாப்பு: முன்மொழிவை ஒப்புக் கொண்ட புடின்! ஜெலென்ஸ்கி வரவேற்பு News Lankasri

என்னது மயில் கர்ப்பமாக இல்லையா, சரவணன் எடுத்த முடிவு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

இந்தியாவிற்கு கலக்கம் தரும் தகவல்... நெருங்கிய நண்பரிடமிருந்து மிகவும் மேம்பட்ட ஆயுதம் வாங்கிய பாகிஸ்தான் News Lankasri
