ஜீமெயில் நிறுவனத்தினால் பயனர்களுக்கு வெளியிட்டுள்ள மகிழ்ச்சி செய்தி
தாங்கள் பயன்படுத்தி வரும் Gmail மின்னஞ்சல் முகவரியின் பெயரை மாற்ற விரும்பினாலும், இதுவரை அதற்கான வாய்ப்பு இல்லாமல் இருந்த பயனர்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு வழங்க, கூகுள் நிறுவனம் தற்போது தயாராகி வருகிறது.
இந்த புதிய வசதி நடைமுறைக்கு வந்ததும், தற்போது பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் முகவரிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல், அதில் தேவையான பெயரை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு உருவாகும் என தெரிவிக்கப்படுகிறது.
நடைமுறைக்கு வரும் புதிய அப்டேட்
இதன் மூலம், புதிய கணக்கொன்றை உருவாக்காமல், ஏற்கனவே உள்ள கணக்கின் தகவல்களை மாற்றாமல், புதிய ஜீமெயில் பயனர் பெயரைத் தேர்வு செய்ய பயனர்களுக்கு முடியும்.
அதன்படி, பயனர்கள் தங்களின் தற்போதைய @gmail.com மின்னஞ்சல் முகவரியை புதிய Gmail முகவரியாக மாற்றிக் கொள்ளும் வசதி பெறவுள்ளனர்.

எனினும், இந்த வசதி @gmail.com என முடியும் மின்னஞ்சல் முகவரிகளை பயன்படுத்துவோருக்கு மட்டுமே பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது. Custom domain, அலுவலகம் மற்றும் பாடசாலை மின்னஞ்சல் முகவரிகளின் பெயர்களை இந்த முறையில் மாற்ற முடியாது.
கூகுளின் விதிமுறைகள்
மேலும், புதிய மின்னஞ்சல் முகவரியும் @gmail.com என முடிவடைய வேண்டியதுடன், இந்த புதிய முறையை தவறாக பயன்படுத்துவதைத் தடுக்க கூகுள் நிறுவனம் சில வரம்புகளையும் விதித்துள்ளது.
பயங்கரவாதத்தில் இருந்து அரசாங்கத்தைப் பாதுகாக்கும் சட்டமூலம்! முன்னாள் நீதி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு
அதன்படி, ஒரு @gmail பயனர் பெயரை மாற்றிய பின்னர், 12 மாதங்கள் கழித்தே மீண்டும் மாற்றம் செய்ய அனுமதி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த காலக்கெடுவுக்குள், தேவையெனில் பழைய மின்னஞ்சல் முகவரிக்கு திரும்புவதற்கே மட்டுமே அனுமதி வழங்கப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது.
கடற்கொள்ளையில் ஈடுபடும் ட்ரம்ப் நிர்வாகம்... எண்ணெய் கப்பல் விவகாரத்தில் ரஷ்யா கடும் தாக்கு News Lankasri
பல்லவன் அம்மா பற்றி சோழனிடம் முழுவதும் கூறிய நிலா, அடுத்து அவர் செய்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நிகழ்ந்த சோகம்: கொடூர தாக்குதலில் 80 வயது மூதாட்டி பலி News Lankasri