நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கபட்ட விசேட சுற்றிவளைப்பில் பலர் கைது
நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை நேற்று(25.12.2025) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விசேட கைது நடவடிக்கை
அதற்கமைய, 29 ஆயிரத்து 539 பேர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களி்ல், கைது செய்யப் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 179 பேரும், திறந்த பிடியாணைகளுக்கமைய 88 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்திய 322 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 36 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், பிற போக்குவரத்துக் குற்றங்களுக்காக 4 ஆயிரத்து 414 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Heart Attack: மாரடைப்பின் போது உயிரைக் காப்பாற்ற உதவும் முதலுதவி பற்றி உங்களுக்கு தெரியுமா? Manithan
பிக்பாஸ் 10ல் குமரன் ரூ. 5 லட்சம் எடுத்துக்கொண்டு வெளியே வந்ததற்கான காரணம் என்ன தெரியுமா? Cineulagam