பயங்கரவாதத்தில் இருந்து அரசாங்கத்தைப் பாதுகாக்கும் சட்டமூலம்! முன்னாள் நீதி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

Dr Wijeyadasa Rajapakshe Sri Lanka Prevention of Terrorism Act
By Rakesh Dec 26, 2025 11:40 AM GMT
Report

பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தை நாடுவேன்" என்று முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலீடாகவே மேற்படி சட்டம் கொண்டுவரப்படவுள்ளது. பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாப்பது தொடர்பான உத்தேச சட்டவரைவு முன்மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளன.

பாரிய சுனாமி அலை:செயற்கைக்கோளில் அவதானிக்கப்பட்ட தகவல்கள்

பாரிய சுனாமி அலை:செயற்கைக்கோளில் அவதானிக்கப்பட்ட தகவல்கள்

விஜயதாஸ ராஜபக்ச

இது தொடர்பில் பொதுமக்களிடம் கருத்து கோரப்பட்டுள்ளது.இது குறித்து எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி வரை சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்தில் இருந்து அரசாங்கத்தைப் பாதுகாக்கும் சட்டமூலம்! முன்னாள் நீதி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு | Former Justice Minister To Challenge Law

இந்நிலையிலேயே முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி சட்டத்தரணியான அவர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பதவியை தற்போது வகிக்கின்றார்.

ISIS அமைப்பிற்கு எதிராக மோசமான வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ள அமெரிக்கா! பகிரங்கப்படுத்தியுள்ள ட்ரம்ப்

ISIS அமைப்பிற்கு எதிராக மோசமான வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ள அமெரிக்கா! பகிரங்கப்படுத்தியுள்ள ட்ரம்ப்

பயங்கரவாதத் தடைச் சட்டம் 

மேற்படி விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

"2009 ஆம் ஆண்டு போர் முடிவடைந்ததன் பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டம் அரசியல் தேவைகளுக்காகவே பயன்படுத்தப்பட்டுவந்தது. அடக்குமுறைக்காகவும் இந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்டது.

பயங்கரவாதத்தில் இருந்து அரசாங்கத்தைப் பாதுகாக்கும் சட்டமூலம்! முன்னாள் நீதி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு | Former Justice Minister To Challenge Law

இதன் பின்னரே, பயங்கரவாதத் தடைச் சட்டம் முழுமையாக இரத்துச் செய்யப்பட வேண்டும் என்ற கருத்து உருவாகியது. தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் இருந்து அழுத்தங்கள் வந்தன.

நல்லாட்சியின்போது 2015 முதல் 2019ஆம் ஆண்டு வரை உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல்கள் சம்பவம் இடம்பெறும் வரை பயங்கரவாதத் தடைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

தேசிய மக்கள் சக்தி

2022 ஆம் ஆண்டு இடைக்கால அரசில் நீதி அமைச்சராகப் பதவியேற்ற பின்னர், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டேன். அதற்கமைய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படட பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி உயர்நீதிமன்றம் சென்றது.

பயங்கரவாதத்தில் இருந்து அரசாங்கத்தைப் பாதுகாக்கும் சட்டமூலம்! முன்னாள் நீதி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு | Former Justice Minister To Challenge Law

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு மாற்றீடாக பிறிதொரு சட்டத்தை உருவாக்கக் கூடாது என்று கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தைக் கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளும் சிவில் அமைப்பினரும் ஏற்றுக்கொண்ட போதும், தேசிய மக்கள் சக்தியும், இலங்கைத் தமிழரசுக் கட்சியும் ஏற்றுக்கொள்ளவில்லை.

கண்டியில் வெடிகுண்டு அச்சுறுத்தல்! பொலிஸார் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை

கண்டியில் வெடிகுண்டு அச்சுறுத்தல்! பொலிஸார் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை

பாரிய அச்சுறுத்தல்

அநுரகுமார திஸாநாயக்க தனது தேர்தல் அறிக்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக இரத்துச் செய்வதாகக் குறிப்பிட்டிருந்தார்.

நல்லாட்சியில் தயாரிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் உள்ளடக்கத்துக்கு அப்பாற்பட்ட வகையில், பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவில் பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பயங்கரவாதத்தில் இருந்து அரசாங்கத்தைப் பாதுகாக்கும் சட்டமூலம்! முன்னாள் நீதி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு | Former Justice Minister To Challenge Law

இது சட்டமானால் அரசமைப்பால் உரித்தாக்கப்பட்டுள்ள தனிமனித சுதந்திரம் பாரிய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும். எனவே, மேற்படி சட்டவரைவை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவேன்." - என்றார்.

பொதுமக்களிடம் கருத்து கோரப்பட்டு, அது சட்டமூலமாக வெளியாகி, முதலாம் வாசிப்புக்கென நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பின்னரே, உயர்நீதிமன்றத்தை நாடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US