காலி முகத்திடல் தாக்குதலுக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்: கத்தோலிக்க ஆயர்கள் பேரவை
காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தி, அதற்கு காரணமான அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்து வேண்டும் என இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நேற்று (22) மிருகத்தனமாக நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் பக்கச்சார்பற்ற மற்றும் வெளிப்படையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.
கத்தோலிக்க ஆயர்கள் பேரவை இன்று (23) இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
வன்முறைத் தாக்குதல்
அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
”வெளிநாட்டு மற்றும் உள்ளூர் ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைத் தாக்குதல் நாட்டின் ஜனநாயகத்தை நிலை நாட்டுவதில் நம்பிக்கையின்மையை மட்டுமே ஏற்படுத்தும்.
பொதுமக்களின் போராட்டங்களை கட்டுப்படுத்துவது மற்றும் மனித உரிமைகளை நசுக்குவது வெகுஜன அமைதியின்மையை மேலும் மோசமாக்கும்.
சர்வதேச சமூகத்தில் பாதிப்பு
இது போன்ற மனிதாபிமானமற்ற நடவடிக்கையை மேற்கொள்வது, சர்வதேச சமூகத்தின் முன் நாட்டின் மதிப்பை சேதப்படுத்தும்" என தெரிவித்துள்ளது.



