கொழும்பில் பதற்றம்! ஈரடுக்கு பாதுகாப்புடன் முப்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள போராட்டக்களம்
இந்நிலையில்,போராட்டக்களத்தின் தற்போதைய நிலைமைகளை கண்காணிக்க மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சற்றுமுன்னர் களத்திற்கு விரைந்துள்ளதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
முதலாம் இணைப்பு
கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் பெருமளவிலான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதுடன், போராட்டக்காரர்கள் வெளியேறாத வண்ணம் கோட்டா கோ கம பகுதியை சுற்றியுள்ள அனைத்து பாதைகளும் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில்,கோட்டா கோ கம பகுதிக்கு தற்போது பொலிஸ் உயரதிகாரிகளின் பாதுகாப்புடன் துப்பரவுப்பணியாளர்கள் அழைத்து வரப்பட்டு எஞ்சியிருக்கும் கூடாரங்கள் மற்றும் தடயங்களை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த கோட்டா கோ கம போராட்டக்களம் முற்றுமுழுதாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் பதற்றம்! காலிமுகத்திடல் பகுதியில் இராணுவத்தினருடன் சிவில் உடையில் களமிறங்கியுள்ள நபர்கள்
இரவோடு இரவாக போராட்டக்காரர்கள் மீது இராணுவத்தினர் கொடூர தாக்குதல்





எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவனாந்தமை கொலை செய்ய காத்திருக்கும் அடியாட்கள்.. ஆதி குணசேகரன் போடும் திட்டம் Cineulagam
