நாடாளுமன்றம் செல்வது 5 வருடங்கள்: வாகனத்தின் விலை 5 கோடி - காலிமுகத்திடலில் மக்கள் ஆவேசம் (Video)
அதிஷ்டமான இந்த நாட்டை இல்லாமல் செய்தது ராஜபக்சர்கள் தான் என காலிமுகத்திடல் பகுதியில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக 14ஆவது நாளாகவும் இன்று தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வரும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் நபரொருவர் கூறுகையில்,
இது ஒரு அதிஷ்டமான நாடாகும். சிங்களவரோ, தமிழரோ, முஸ்லிமோ இந்த நாட்டில் பிறக்க அனைவரும் அதிஷ்டம் அடைந்திருக்க வேண்டும். ஆனால் இந்த நாட்டை இல்லாமல் செய்தது ராஜபக்சர்கள் தான்.
உலகின் முன்னணி தயாரிப்பு வாகனங்களில் செல்கின்றனர். எனினும் சாதாரண மக்களின் வயிற்றில் அடிக்கின்றனர். இரண்டு வருடங்களுக்கு முன்னரே மகிந்த சென்றதை போன்றே இவர்களும் செல்ல நேரிடும்.
மக்கள் தாம் படும் துன்பங்களில் இருந்து வெளியில் வர சரியான பொருத்தமான நபரொருவர் தெரிவு செய்யப்பட வேண்டும்.
அரசியல்வாதிளை பாருங்கள் நாடாளுமன்றம் செல்வதோ ஐந்து வருடங்கள் ஆனால் வைத்திருக்கும் வாகனத்தின் விலை ஐந்து கோடி ரூபாவாக காணப்படுகிறது என தமது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.



