தயார் நிலையில் பொலிஸாருடன் நீர்த்தாரை பிரயோக வாகனங்கள்: காலிமுகத்திடல் நோக்கி படையெடுக்கும் மக்கள் (Video)
காலிமுகத்திடல் பகுதியில் போராட்டம் தொடர்ந்து தீவிரமடைந்து வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அத்துடன் குறித்த இடத்திற்கு கொழும்பின் பல பகுதிகளில் இருந்து சிறு ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுக்களும் வந்து இணைவதாக தெரியவருகிறது.
மூன்றாம் இணைப்பு
காலிமுகத்திடல் பகுதியில் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அப்பகுதியில் முழுமையாக இணைய வசதி வலுவிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
அத்துடன், அப்பகுதியில் பாதுகாப்பு கடமைகளில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்வதற்கான வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இரண்டாம் இணைப்பு
காலி முகத்திடல் பகுதியில் தற்போது பெருந்திரளான இளைஞர், யுவதிகள் குவிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேசியக்கொடிகள் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளுடன் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அப்பகுதியில் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அத்துடன் ஜனாதிபதி செயலகத்தின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
காலி முகத்திடலில் இன்றைய தினம் மக்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் அங்கு நிர்மாணப் பணிகளை முன்னிட்டு சில பகுதிகள் மூடப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ஒரு பகுதி மாத்திரம் மக்களுக்காக திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
இந்த நிலையில் போராட்டத்திற்காக மக்கள் பலர் பேருந்துகளில் வரும் நிலையில் அப்பகுதிக்கு மக்கள் தொடர்ந்து வருகை தந்த வண்ணம் இருப்பதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
அரசிற்கு எதிராக போராட்டம் மேற்கொள்ளும் வகையில் அரசாங்கத்திற்கும் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கும் எதிராக வாசங்கள் எழுதப்பட்ட பதாதைகளுடன் மக்கள் காலி முகத்திடல் நோக்கி படையெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.