அதிகாலை இடம்பெற்ற கொடூரம்: கூர்மையான ஆயுதத்தால் தாக்கி இரட்டை கொலை - ஆபத்தான நிலையில் மற்றுமொருவர்...!
காலி - தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடவில பகுதியில் இன்று காலை (03) ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை சுமார் 6 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போது அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு - சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் எண்ணெய் விலையில் பதிவாகிய திடீர் மாற்றம்
ஆபத்தான நிலையில் மற்றுமொருவர்...!
இந்த தாக்குதலில் அக்குடும்பத்திணை சேர்ந்த வயோதிப தாயும், அவரது பேத்தியின் கணவரும் உயிரிழந்துள்ளனர்.

மேலும், தாக்குதலில் காயமடைந்த பேத்தி தற்போது கராபிட்டிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது ஒரு கை துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட சந்தேகநபர் தெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் சம்பவத்தில் உயிரிழந்த வயோதிப பெண்ணின் மற்றொரு மகளின் கணவர் என்றும், அந்த மகள் தற்போது இத்தாலியில் பணிபுரிந்து வருவதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலை தொடர்பில் விசாரணை
சந்தேகநபர், உனவட்டுன, தலவெல்லவைச் சேர்ந்த 35 வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குடும்பத்தகராறின் காரணமாக சந்தேகநபர் கொலையை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

எல்பிட்டிய பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து சம்பவ இடத்தில் விசாரணை நடத்தியுள்ளனர்.
மேலும், தெலிக்கடை பொலிஸ் பொறுப்பதிகாரி, தலைமை ஆய்வாளர் ஹர்ஷா டி சில்வாவின் அறிவுறுத்தல்களின் பேரில், குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி, எம்.பி.ஜி. சரச்சந்திரா மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.
உலக சந்தையில் அதிரடியாக உயர்ந்த எண்ணெய் விலை! இலங்கையின் பெட்ரோல் மற்றும் டீசல் தயாரிப்புகளில் சிக்கல்
இறுதிக்கட்டத்தை நெருங்கும் மத்திய கிழக்கு போர்! குறிவைக்கப்பட்ட ஈரானின் எஞ்சிய பகுதி - தொடரும் அமெரிக்காவின் எச்சரிக்கை