காலி - கொழும்பு பிரதான வீதியில் விபத்து: ஒருவர் பலி! நால்வர் வைத்தியசாலையில் அனுமதி
காலி - கொழும்பு பிரதான வீதியில் அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் சிறிய ரக லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் காயமடைந்த நால்வரும் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மொரட்டுவையில் கட்டடமொன்றில் வேலை செய்துவிட்டு பத்தேகம நோக்கிச்சென்று கொண்டிருந்த குழுவினரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

விபத்திற்கான காரணம்
வாகன சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை களக்கம் காரணமாகவே லொறி சாலையை விட்டு விலகி கொன்கிரீட் சுவரொன்றில் மோதியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் லொறியின் பின் பக்கத்தில் பயணித்தவர்களில் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
Viral Video: மீனுடன் வானில் பறந்த கழுகு... தட்டிப்பறிக்க வந்த பெலிகான் பறவை! கடைசியில் நடந்தது என்ன? Manithan