பேருந்து கட்டணம் குறைப்பு தொடர்பில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிவிப்பு
டீசலின் விலை 27 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள போதிலும் பேருந்து கட்டணம் குறைக்கப்படமாட்டாது என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டில் நேற்று (30.11.2023) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு அறிவித்திருந்தது.

அதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 346 ரூபாவாக குறைந்துள்ளது.
ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 426 ரூபாவாக அதிகரித்துள்ளது.

ஒடோ டீசல் 27 ரூபாவால் குறைவடைந்துள்ளதுடன் அதன் புதிய விலை 329 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பேருந்து கட்டணம் குறைக்கப்படமாட்டாது என தனியார் பேருந்து சங்கங்கள் அறிவித்துள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam