ஞானசார தேரர் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி பின்னணி

Gotabaya Rajapaksa Maithripala Sirisena Galagoda Aththe Gnanasara Thero Crime
By Sajithra Oct 09, 2026 12:43 AM GMT
Report

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையின் எஞ்சிய பகுதியை அனுபவிப்பதற்காக மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் மற்றும் வழக்குப் பின்னணிகள் குறித்து தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல்கள் வெளியிட்டுள்ளது. 

அதன்படி, சுமார் 20இற்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுக்கள் கலகொடஅத்தே ஞானசார தேரர் தொடர்பில் பதிவாகியுள்ளன. 

களனி பல்கலைக்கழகத்தில் பௌத்த தத்துவத்தில் பட்டமும், வணிக நிர்வாகத்தில் முதுகலைப்பட்டமும் பெற்ற இவர், 2012இல் பொதுபல சேனா அமைப்பை தோற்றுவித்தார்.

இலங்கையில் முன்னெடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் பழிவாங்கும் நோக்கமல்ல: அரசாங்கத்தின் அறிவிப்பு

இலங்கையில் முன்னெடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் பழிவாங்கும் நோக்கமல்ல: அரசாங்கத்தின் அறிவிப்பு

பல்வேறு வழக்குகள்.. 

இந்நிலையில், கடந்த 2000ஆம் ஆண்டில் கொழும்பு போக்குவரத்து நீதிமன்றத்தில் மதுபோதையில் வாகனத்தை ஓட்டியது உள்ளிட்ட 9 குற்றச்சாட்டுகளுக்காக (வழக்கு எண்: 6315/2000) செப்டெம்பர் 20 அன்று இவருக்கு ரூபா 12,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஞானசார தேரர் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி பின்னணி | Galagoda Aththe Gnanasara Thero Case Details

2012 ஜூன் மாதம் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக கடுமையான இனவாத மற்றும் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசிய காணொளி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

2014 ஏப்ரல் 9 அன்று 'ஜாதிக பல சேனா' அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பில் நுழைந்து வட்டரக விஜித தேரரை அச்சுறுத்தியது மற்றும் குர்ஆன் குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்டது தொடர்பான கோப்புகள் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டன.

2014 ஜூன் 15 அன்று அளுத்கம கூட்டத்தில் இவர் ஆற்றிய உரையைத் தொடர்ந்து அளுத்கம, தர்கா நகர் மற்றும் பேருவல பகுதியில் பரவிய வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர்.

2014 ஜூன் 26 அன்று கைது செய்யப்பட்ட 13 பிபிஎஸ் உறுப்பினர்களை விடுவிக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வதாக அச்சுறுத்தினார்.

கைது செய்யப்படல்.. 

2016 ஜனவரி 25 அன்று பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன வழக்கு (எண்: B 7417/10) ஹோமாகம நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, அரச சட்டத்தரணியை அச்சுறுத்தியதற்காகவும் சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்தியதற்காகவும் நீதிமன்ற அவமதிப்பு, பணிக்கு இடையூறு விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டார்.

ஞானசார தேரர் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி பின்னணி | Galagoda Aththe Gnanasara Thero Case Details

2016 ஜூலை 16 இல் குரகல/ஜைலானி மற்றும் கிருளப்பனை ஊடக சந்திப்பில் இஸ்லாத்தை விமர்சித்தது தொடர்பாக 2016இல் இரு தனித்தனி வழக்குகள் தொடரப்பட்டன.

2017 ஜூன் 21 அன்று வெலிக்கடை சம்பவத்திற்காக கைது செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். 2018 பெப்ரவரியில் திகன கலவரத்தின்போதும் இவரது வருகை பதிவானது.

2018 மே 24 அன்று ஹோமாகம நீதிமன்றம் சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்திய வழக்கில் இவரைக் குற்றவாளியாக அறிவித்து, 2018 ஜூன் 14 அன்று 6 மாதக் கடுங்காவல் தண்டனையும் ரூபா 50,000 நஷ்டஈடும் விதித்தது.

2018 ஒகஸ்ட் 8 அன்று மேல்முறையீட்டு நீதிமன்றம் ஹோமாகம சம்பவ நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் 4 குற்றச்சாட்டுகளுக்காக இவருக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து வெலிக்கடை சிறையில் அடைத்தது.

ஈரானை தாக்குவது குறித்து ட்ரம்ப் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு

ஈரானை தாக்குவது குறித்து ட்ரம்ப் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு

கோட்டாபய வழங்கிய பதவி 

2019 மே 23 அன்று அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா இவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி விடுவித்தார்.

ஞானசார தேரர் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி பின்னணி | Galagoda Aththe Gnanasara Thero Case Details

2021 ஒக்டோபர் 26 அன்று அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இவரை 'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி பணிக்குழுவின் தலைவராக நியமித்தார்; இதற்கான அறிக்கை 2022 ஜூன் 29 அன்று சமர்ப்பிக்கப்பட்டது.

2023 ஒக்டோபர் 2 அன்று பம்பலப்பிட்டி வீடமைப்பு விவகாரம் (இனோகா சேனானாயக்கவின் புகார்) தொடர்பாக அறிவித்தல் வழங்கப்பட்டது.

2016இல் இடம்பெற்ற குரகல பேச்சு தொடர்பான வழக்கில் 2024 மார்ச் 28 அன்று கொழும்பு மேல் நீதிமன்றம் இவருக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் ரூபா 100,000 அபராதமும் விதித்தது; பின்னர் 2024 ஜூலை 18 அன்று மேல்முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்கியதை அடுத்து, 2024 ஜூலை 22 அன்று விடுவிக்கப்பட்டார்.

பம்பலப்பிட்டி ரூபா 100 மில்லியன் மதிப்புள்ள வீடு தொடர்பான வழக்கில் 2024 செப்டெம்பர் 12 அன்று சொத்தை ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது.

தொடர்ந்து, 2016 கிருளப்பனை உரை தொடர்பாக 2025 ஜனவரி 9 அன்று கொழும்பு நீதவான் நீதிமன்றம் 9 மாத சிறைத்தண்டனையும் ரூபா 1,500 அபராதமும் விதித்தது. 2026 ஜூன் 1 அன்று மேல் நீதிமன்றத்தில் சொத்தை வாரிசுகளிடம் ஒப்படைப்பதாக பாதுகாப்புத் தரப்பு தெரிவித்தது.

விதிக்கப்பட்ட தண்டனைகள் 

2026 ஜூன் 23 அன்று 9 மாத சிறைத்தண்டனையை எதிர்த்த மேல்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து தண்டனையை உறுதிப்படுத்தியது.

ஞானசார தேரர் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி பின்னணி | Galagoda Aththe Gnanasara Thero Case Details

2026 செப்டெம்பர் 10 அன்று, மாற்றுக் கொள்கைகளுக்கான மையம், கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து மற்றும் சந்தியா எக்னெலிகொட ஆகியோர் தொடர்ந்த வழக்கில், 2019இல் வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு செல்லாது மற்றும் சட்டவிரோதமானது என உயர் நீதிமன்ற நீதிபதி ஜனக் டி சில்வா தீர்ப்பளித்தார்.

2026 செப்டெம்பர் 12 அன்று நாவல வீதி விகாரைக்குச் சென்ற சிறைத்துறை அதிகாரிகளிடம் இவர் சிக்கவில்லை. இந்நிலையில் 2026 செப்டெம்பர் 16 அன்று நீதிமன்றத்தில் முன்னிலையான நிலையில் வழக்கு செப்டெம்பர் 30க்கு ஒத்திவைக்கப்பட்டது.

2026 செப்டெம்பர் 29 அன்று அவர் நீதிமன்றில் முன்னிலையாகாததால் மேல்முறையீட்டு நீதிமன்றமும், செப்டெம்பர் 30 அன்று மேல் நீதிமன்றமும் பிடியாணை பிறப்பித்தன.

கடந்த 1ஆம் திகதி அன்று திறந்த பிடியாணை விதிக்கப்பட்டு, 2026 ஒக்டோபர் 3 இரவு களுத்துறை தினியாவல (லெனகிரி) வன அரணியத்தில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டார்.

 

ஞானசார தேரருக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல்

ஞானசார தேரருக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல்

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US