ஞானசார தேரருக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல்
பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செலயாளர் கலகொடத்தே ஞானசார தேரருக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரரை வேறும் வழக்குகளுக்காக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் போது சிவில் ஆடை அணிவிக்கக் கூடாது என இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
ஞானசார தேரரை, வழக்குகளுக்காக சிறையிலிருந்து நீதிமன்றிற்கு அழைத்துச் செல்லும் போது காவி உடை தரித்துச் செல்ல, சிறைச்சாலை திணைக்களம் அனுமதி வழங்க வேண்டுமென மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான உத்தரவினை சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டுமென ஞானசார தேரருக்கு ஆதரவாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியான சாந்த ஜெயதிலக்க என்பவரினால் உச்ச நீதிமன்றில் இந்த மனு நேற்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இம்மனுவில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், நீதி அமைச்சின் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஞானசார தேரரின் காவி உடை களைவு விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த மனு உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.