நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் கைது செய்யப்பட்டமைக்கு கூட்டமைப்பு கடும் கண்டனம்
யாழ்.நல்லூரில் தியாக தீபம் திலீபனை நினைவேந்திய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், பொலிஸாரால் கைது செய்யப்பட்டமையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது என அதன் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ((M.A. Sumanthiran ) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நினைவேந்தலைத் தடை செய்ய முடியாது. அதேபோன்று நினைவேந்தலுக்கு நீதிமன்றத்தினூடாகத் தடைகளும் விதிக்க முடியாது. எந்தவொரு அத்துமீறலும் இன்றி, மக்கள் கூட்டம் இன்றி, கொரோனா பாதுகாப்பு மீறல் இன்றி ஓர் மக்கள் பிரதிநிதி மேற்கொண்ட நினைவேந்தலை பொலிஸார் கையாண்ட விதம் மிகவும் பாரதூரமானது.
கஜேந்திரன் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்று தெரிந்தும் ஒரு சாதாரண மனிதனுக்கு வழங்க வேண்டிய கௌரவத்தையேனும் வழங்காது அவரை இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றி குற்றவாளியைக் கொண்டு செல்வது போன்று பொலிஸார் கொண்டு சென்றனர். இதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்...
யாழில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் திடீர் கைது
கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் பிணையில் விடுதலை
கஜேந்திரன் எம்.பியை இழுத்துச் செல்லும் பொலிஸார் - பெண்களுடன் முறுகல்! பரபரப்பு காணொளி
தியாகதீபம் திலீபனின் சுடரை சப்பாத்து கால்களால் மிதித்த பொலிஸார்! - கனகரத்தினம் சுகாஸ்

253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri

அமெரிக்காவில் பிறந்தவர்களை நாடுகடத்துவதுதான் அடுத்த வேலை: அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சூசகம் News Lankasri

கேம் சேஞ்சர் ஓடாதுனு முன்பே தெரியும்.. மிகப்பெரிய நஷ்டம்: ஷங்கரை தாக்கிய தயாரிப்பாளர் தில் ராஜு Cineulagam
