கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய திட்டம் - இலங்கை பயணிகளுக்கு மகிழ்ச்சியாக தகவல்
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தானியங்கி இ-கேட்கள் (automated e-gates) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அந்த வகையில் இலங்கைப் பயணிகளுக்காக இ-கேட்கள் தற்போது செயல்பாட்டில் வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைப் பயணிகளின் வசதி
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் பவழியாக நாட்டிற்கு வருகை தரும் இலங்கைப் பயணிகளின் வசதிக்ககா குடிவரவு செயல்முறையை மேலும் விரைவாகவும் பாதுகாப்பாகவும் மேற்கொள்ள தானியங்கி இ-கேட்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்பயனை பெற வருகை முனையத்தில் அமைந்துள்ள இ-கேட்களை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) பிரைவேட் லிமிட்டட் நிறுவனம் தெரிவிக்கையில், இந்த வசதி ஆரம்ப கட்டத்தில் நாடு திரும்பும் இலங்கைப் பயணிகளுக்கு மட்டும் கிடைக்கும்.

வருகை அனுபவம்
தானியங்கி இ-கேட்கள் விரைவானதும் பாதுகாப்பானதுமான குடியேற்ற அனுமதி வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பயணிகளுக்கு மேலும் தடையற்றதும் திறமையானதுமான வருகை அனுபவம் உறுதி செய்யப்படுகிறது.
விமான நிலைய செயற்பாடுகளை நவீனமயமாக்குவதற்கான ஒரு முன்னேற்றமான படியாக இந்த முயற்சியை விவரித்துள்ள நிறுவனம், இந்த அமைப்பு விமான நிலையத்தில் ஸ்மார்ட்டர் வருகை அனுபவத்தை வழங்குவதாகவும், வேகம், பாதுகாப்பு மற்றும் பயணிகளின் வசதியை முன்னுரிமையாகக் கொண்ட உலகளாவிய விமான மையங்களுக்கு ஒப்பானது எனவும் கூறியுள்ளது.