தியாகதீபம் திலீபனின் சுடரை சப்பாத்து கால்களால் மிதித்த பொலிஸார்! - கனகரத்தினம் சுகாஸ்
தியாக தீபம் திலீபனின் சுடரை பொலிஸார் சப்பாத்துக் கால்களால் மிதித்து அவமதித்துள்ளனர் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும், சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஸ்(Kanagartnam Sugash) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கண்டனம் வெளியிடும் வகையில் சட்டத்தரணி சுகாஸ் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
“நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனையும் எங்கள் கட்சியின் பெண் உறுப்பினர்களையும் பொலிஸார் தாக்கியுள்ளனர்.
கைது செய்த நாடாளுமன்ற உறுப்பினரை உடனடியாக பொலிஸார் விடுவிக்காவிட்டால் இதனுடைய விளைவுகள் விபரீதமானதாக இருக்கும்” என குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்..
யாழில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் திடீர் கைது
கஜேந்திரன் எம்.பியை இழுத்துச் செல்லும் பொலிஸார் - பெண்களுடன் முறுகல்! பரபரப்பு காணொளி
எனது நகரத்திற்குள் அமெரிக்க அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை: கிண்டலுக்குள்ளான கனேடிய மேயர் News Lankasri
ஒன்றாக சுற்றுலா சென்றுள்ள எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நடிகர்கள்... எங்கு சென்றுள்ளார்கள் பாருங்க Cineulagam