படையினர் மீது கஜேந்திரகுமார் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு
வடக்கு, கிழக்கில் போதைப்பொருள் பாவனைக்குப் பின்னால் படையினரும் பொலிஸாரும் செயற்படுகின்றனர் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டை சபையில் நேற்று (10.11.2022) முன்வைத்துள்ளார்.
எனவே, இது தொடர்பில் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரச இரசாயனப் பகுப்பாய்வு

இதேவேளை, போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்ட பின்னர் அவற்றை அரச இரசாயனப் பகுப்பாய்வுக்கு அனுப்பும் போது உரிய சட்டமுறை பின்பற்றப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
குறிப்பாக நீதிமன்றத்தின் ஊடாக குறித்த போதைப்பொருட்கள் அரச பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பப்படுவது சிறந்த முறை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொலிஸார் நேரடியாக அவற்றை ஆய்வுக்கு அனுப்பும் முறை இரத்துச் செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அவரது இரத்தத்திற்குப் பழிவாங்குவது உறுதி: தந்தையின் இறுதிச்சடங்கில் மொஜ்தபா கமேனி உருக்கம் News Lankasri
செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை... அதிர்ஷ்டத்தினை அள்ளிச் செல்லும் ராசியினர் யார்னு தெரியுமா? Manithan
சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan