ஒற்றையாட்சி அரசமைப்பை நிறைவேற்ற தமிழரசுக் கட்சி தீவிரம்- கஜேந்திரகுமார் எம்.பி. பகிரங்க எச்சரிக்கை

Sri Lankan Tamils Gajendrakumar Ponnambalam Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government
By Rakesh Jun 18, 2026 08:09 AM GMT
Report

புதிய அரசமைப்பு என்ற பெயரில் “ஏக்கிய ராஜ்ஜிய” (ஒற்றையாட்சி) அரசமைப்பு நிறைவேற்றப்பட்டால் தமிழ் மக்கள் தங்களின் உரிமைகளை இழந்து அடிமையினமாக மாற்றப்படும் பேராபத்து ஏற்படும் என்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

பருத்தித்துறை நகரின் மூன்றாம் வட்டாரத்துக்குட்பட்ட கோரியடி பகுதியில் நேற்றுமுன்தினம்(16.06.2026) நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தங்கத்தின் விலையில் பதிவாகியுள்ள மாற்றம் - இன்றைய விலை நிலவரம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் பதிவாகியுள்ள மாற்றம் - இன்றைய விலை நிலவரம்

தமிழ் தலைவர்களுக்குள் ஏற்பட்ட பிளவு

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு - கிழக்கில் தமிழ் மக்களின் குறிப்பிட்ட தொகை வாக்குகளைப் பெற்று, அதன் மூலம் தேசிய மக்கள் சக்திக்கு 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்துள்ளனர்.

இதனைத் தமிழ் மக்கள் தமக்கு வழங்கிய ஆணையாகத் தேசிய மக்கள் சக்தி சர்வதேச ரீதியாகக் காட்டி வருகின்றது. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் காணப்படும் இந்த அரசு, புதிய அரசமைப்பு என்ற பெயரில் 2015 - 2019 காலப்பகுதியில் நல்லாட்சி அரசால் உருவாக்கப்பட்ட 'ஏக்கிய ராஜ்ஜிய' அரசமைப்பை நிறைவேற்றத் தீவிரம் காட்டி வருகின்றது.

அதனை உருவாக்குவதில் நல்லாட்சி காலத்தில் துணைநின்ற சுமந்திரன், இப்போதும் அதற்கு ஆதரவு வழங்குவதில் தீவிரமாக உள்ளார்.

ஒற்றையாட்சி அரசமைப்பை நிறைவேற்ற தமிழரசுக் கட்சி தீவிரம்- கஜேந்திரகுமார் எம்.பி. பகிரங்க எச்சரிக்கை | Gajendrakumar Ponnambalam On Unitary System

அந்த அரசமைப்புக்கு எதிராகத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவராவது வாக்களித்தால், அவர்களைக் கட்சியில் இருந்து நீக்குவதாகக் கட்சியின் செயலாளர் என்ற ரீதியில் சுமந்திரன் கடுமையாக எச்சரித்துள்ளார். அன்று கூட்டமைப்பாக இருந்தவர்கள் இன்று வீடு, சங்கு எனப் பிரிந்து நிற்கின்றனர்.

தேசிய மக்கள் சக்தி, தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி என வடக்கு, கிழக்கில் உள்ள 19 நாடாளுமன்ற உறுப்பினர்களில், எம்மைத் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) தவிர ஏனைய 18 பேரும் இந்த அரசமைப்புக்கு ஆதரவு வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசமைப்பை மாற்ற வேண்டுமானால் அதற்குச் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அப்படி ஒரு வாக்கெடுப்பு நடந்தால், தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் அதற்கு எதிராக வாக்களிக்க வேண்டும்.

ஏனெனில், 'ஏக்கிய ராஜ்ஜிய' அரசமைப்பின் மூலம் இந்த நாடு சிங்களவர்களுக்கானதாக முற்றிலுமாக மாற்றப்பட்டுவிடும். அதன் பின்னர் தமிழர்கள் அடிமை இனமாக மாறும் பேராபத்து ஏற்படும்.

ஆகவே, எமது உரிமைகளை ஒருபோதும் நாம் விட்டுக்கொடுக்க முடியாது என்றார்.

ஒற்றையாட்சி அரசமைப்பை நிறைவேற்ற தமிழரசுக் கட்சி தீவிரம்- கஜேந்திரகுமார் எம்.பி. பகிரங்க எச்சரிக்கை | Gajendrakumar Ponnambalam On Unitary System

இதன்போது, பருத்தித்துறை நகர சபையின் சமகால செயற்பாடுகள் தொடர்பான விளக்கங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டதோடு, பொதுமக்களின் முறைப்பாடுகள் மற்றும் அபிப்பிராயங்கள் கேட்டறியப்பட்டுள்ளன.

கோரியடி வாழ். கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக, வட்டியின்றி இலகு தவணையில் மீளச் செலுத்தக்கூடியவாறு தலா ஒரு இலட்சம் ரூபா சுழற்சிமுறைக் கடன் திட்டத்தை முன்னெடுப்பதற்காக, நகர பிதா டக்ளஸ் போல் தனது சொந்த நிதியிலிருந்து ஐந்து இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளார்.

இதற்கான காசோலை அவராலேயே சங்கத் தலைவரிடம் கையளிக்கப்பட்டது.

அண்மையில் வடமராட்சி கடலில் மீன்பிடிக்கச் சென்ற போது மாயமாகிக் காணாமல் போன கோரியடி கடற்றொழிலாளர் சு.சுஜிக்குமாரின் பிள்ளைகளின் கல்வி கற்கும் காலம் முழுவதுக்குமான கல்விச் செலவை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பொறுப்பேற்றுள்ளது.   

வாகன இறக்குமதி! அரசாங்கத்தின் முடிவால் பதிவான அதிரடி மாற்றம்

வாகன இறக்குமதி! அரசாங்கத்தின் முடிவால் பதிவான அதிரடி மாற்றம்

அமெரிக்க ஹோட்டலுக்குள் சிக்கிய இலங்கை பிக்குவின் லீலைகள் - விசாரணைகளில் பல திடுக்கிடும் தகவல்கள்

அமெரிக்க ஹோட்டலுக்குள் சிக்கிய இலங்கை பிக்குவின் லீலைகள் - விசாரணைகளில் பல திடுக்கிடும் தகவல்கள்


GalleryGalleryGalleryGallery
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US