கஜேந்திரகுமாரை யாரும் தாக்கவில்லையாம்! மறைக்கும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
யாழ். வடமராட்சி கிழக்கு, மருதங்கேணியில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பொலிஸாருக்கு இடையில் வாய்த்தர்க்கம் மாத்திரமே இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (04.06.2023) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு எந்தவொரு அச்சுறுத்தலோ அல்லது தாக்குதலோ இடம்பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாக்கப்பட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று முன்தினம் (02.06.2023) மாலை மருதங்கேணியில் தாக்கப்பட்டுள்ளார்.
அவரை அடித்ததாகக் கூறப்படும் அரச புலனாய்வாளர் தப்பிச் சென்று தலைமறைவாகினார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையிலேயே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |