யாழில் கஜேந்திரகுமார் எம்.பிக்கு நடந்தது என்ன..! பொலிஸ் பேச்சாளர் கருத்து(Video)

Jaffna Gajendrakumar Ponnambalam Sri Lanka Politician
By Rakesh Jun 03, 2023 12:05 AM GMT
Report

மருதங்கேணியில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பொலிஸாருக்கு இடையில் வாய்த்தர்க்கம் மாத்திரமே ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

மேலும் அங்கு எந்தவொரு அச்சுறுத்தலோ தாக்குதலோ இடம்பெறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

முதலாம் இணைப்பு

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று பகல் மருதங்கேணியில் தாக்கப்பட்டுள்ளார்.


அவரை அடித்ததாக கூறப்படும் அரச புலனாய்வாளர் தப்பிச் சென்று தலைமறைவாகினார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான முரண்பாடுகளின்போது கஜேந்திரகுமாரைப் பொலிஸ் புலனாய்வாளர் என்று அடையாளப்படுத்திக் கொண்ட நபர் ஒருவர் பிஸ்டல் துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளதாகவும் என்றும் குற்றஞ்சாட்டப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது,

யாழில் கஜேந்திரகுமார் எம்.பிக்கு நடந்தது என்ன..! பொலிஸ் பேச்சாளர் கருத்து(Video) | Maruthankerni Gajendrakumar Ponnambalam Issue

மருதங்கேணியில் உள்ள விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்தவர்களைச் சந்திப்பதற்காக அங்கு சென்றிருந்தார் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்.

அங்குள்ள மைதானத்தில் இளைஞர்களுடன் அவர் கலந்துரையாடிக் கொண்டிருந்ததை இருவர் தமது தொலைபேசியில் காணொளியாகப் பதிவு செய்து கொண்டிருந்தனர்.

யாழில் கஜேந்திரகுமார் எம்.பிக்கு நடந்தது என்ன..! பொலிஸ் பேச்சாளர் கருத்து(Video) | Maruthankerni Gajendrakumar Ponnambalam Issue

இதைக் கண்டதும் நாடாளுமன்ற உறுப்பினரின் ஆய்வு உதவியாளர் அந்த இருவரிடமும் சென்று, நீங்கள் யார், எதற்காகக் காணொளிப் பதிவுகளைச் செய்கிறீர்கள் என்று வினவியுள்ளார்.

தமது விவரங்களை வெளியிட மறுத்த அந்த இருவருக்கும் ஆய்வு உதவியாளருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கவரப்பட்ட ஏனையவர்கள் அந்த இடத்தில் குழும இரு தரப்பினருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் அவர்கள் தங்களை அரச புலனாய்வாளர்கள் என்று கூறியுள்ளனர். அதனை நிரூபிப்பதற்கு வேண்டிய அடையாள அட்டையைக் காண்பிக்கும்படி நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் அவர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

யாழில் கஜேந்திரகுமார் எம்.பிக்கு நடந்தது என்ன..! பொலிஸ் பேச்சாளர் கருத்து(Video) | Maruthankerni Gajendrakumar Ponnambalam Issue

ஆனால், அவர்கள் அதைச் செய்யவில்லை. இதையடுத்து வாய்த்தர்க்கங்கள் இரண்டு தரப்பினருக்கும் இடையில் முற்றிய நிலையில் தம்மைப் புலனாய்வாளர்கள் என்று அடையாளப்படுத்திய இருவரில் ஒருவர் திடீரென நாடாளுமன்ற உறுப்பினரைத் தலைக்கவசத்தால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதனால் ஆத்திரமுற்ற மற்றையவர்கள் எஞ்சிய நபரைச் சுற்றிவளைத்துள்ளனர். தாக்கிவிட்டு ஓடிய நபர் அங்கு வரும் வரை அவரை விடுவிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.

யாழில் கஜேந்திரகுமார் எம்.பிக்கு நடந்தது என்ன..! பொலிஸ் பேச்சாளர் கருத்து(Video) | Maruthankerni Gajendrakumar Ponnambalam Issue

அந்த நபர் உடனடியாகப் பொலிஸாருக்குத் தொலைபேசி அழைப்பெடுத்துப் பேசியுள்ளார். அந்தச் சந்தர்ப்பத்தில் அருகில் இருந்த பாடசாலையொன்றினுள் இருந்து பொலிஸ் சீருடையிலும் பொலிஸ் சிவிலுடையிலுமாக வந்த இருவர் என்ன, ஏது என்று விசாரித்துள்ளனர்.

முன்னணியினர் மடக்கி வைத்திருந்த நபர் அரச புலனாய்வாளர் என்று கூறி அவரை விடுவிக்குமாறு இரு பொலிஸாரும் தெரிவித்துள்ளனர். தப்பியோடியவர் வராமல் அவரை விடுவிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டதும் மோசமான வார்த்தைகளால் இரு பொலிஸாரும் திட்டியுள்ளனர்.

அப்போது ஒருவர் தன்னிடமிருந்த பிஸ்டலைத் தூக்கி நாடாளுமன்ற உறுப்பினரின் முகத்துக்கு நேரே நீட்டி மடக்கி வைத்திருக்கும் நபரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளார்.

இந்தச் சமயத்தில் பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் அங்கு வருகை தந்தார். ஏ.ஜயதிஸ்ஸ என்று அவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். தானே அந்தப் பகுதிக்கான பொலிஸ் நிலையப் பதில் பொறுப்பதிகாரி என்றார்.

அவரும் முன்னணியினர் மடக்கி வைத்திருக்கும் நபர் அரச புலனாய்வாளர் என்றும், அவரை விடுவிக்கும்படியும் வலியுறுத்தினார்.

அந்த இருவரும் இப்படித் தவறாக நடந்துகொண்டதற்காகத் அவர்களுக்குத் தண்டனை இடமாற்றம் வழங்குவார் என்றும், இந்தப் பிரச்சினையை இணக்கப்பாட்டுடன் முடித்துக்கொள்ளலாம் என்றும் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஆனால் முன்னணியினர் அதற்கு மறுப்புத் தெரிவித்துவிட்டனர். தாக்கிவிட்டுத் தப்பியோடிய நபரைக் கொண்டு வந்து அடையாளப்படுத்தும் வரைக்கும் மடக்கி வைத்திருந்த நபரை விடுவிக்க முடியாது என்று தெரிவித்தனர்.

யாழில் கஜேந்திரகுமார் எம்.பிக்கு நடந்தது என்ன..! பொலிஸ் பேச்சாளர் கருத்து(Video) | Maruthankerni Gajendrakumar Ponnambalam Issue

இதனால் அங்கு மீண்டும் தர்க்கமான சூழல் எழுந்தது. இதையடுத்து பொலிஸ் நிலையத்துக்கு வந்து இது தொடர்பில் முறைப்பாடு வழங்குமாறும் பொலிஸ் அதிகாரி, நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தின் மூலம் தனது நாடாளுமன்றச் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது என்று தெரிவித்து, அதற்குரிய நடவடிக்கையை எடுப்பேன் என்று கூறிய பின்னர் தடுத்து வைத்திருந்த நபரை விடுவித்து அங்கிருந்து புறப்பாட்டார் கஜேந்திரகுமார்." - என்றனர்.

யாழில் கஜேந்திரகுமார் எம்.பிக்கு நடந்தது என்ன..! பொலிஸ் பேச்சாளர் கருத்து(Video) | Maruthankerni Gajendrakumar Ponnambalam Issue

சம்பவம் குறித்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி., தான் தாக்கப்பட்டது உண்மை என்று உறுதிப்படுத்தினார். அத்துடன் தன்னை நோக்கிப் பிஸ்டல் நீட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

''அருகிலிருந்த பாடாசலையில் இருந்து வந்த இருவர் நாம் தடுத்து வைத்திருந்த நபரை விடுமாறு கோரி மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தினர். அதற்குள், ஒருவர் என்னைத் துப்பாக்கியால் இலக்குவைத்து தடுத்து வைக்கப்பட்டுள்ள நபரை விடுவிக்குமாறு கோரினார்'' - என யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று (03.06.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கஜேந்திரகுமார் எம்.பி. தெரிவித்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US