யாழில் கஜேந்திரகுமார் எம்.பி மீது புலனாய்வாளர்கள் தாக்குதல் நடத்த முயற்சியாம்: சுகாஸ் தகவல் (Video)
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை புலனாய்வாளர் தாக்கிச் சுட முயற்சி
செய்ததாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட
சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் இன்றைய தினம் (02.06.2023) கனகரத்தினம் சுகாஸ், தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மக்கள் சந்திப்புக்காக வடமராட்சி பகுதிக்கு சென்றுள்ளார்.
வன்மையாகக் கண்டிக்கின்றோம்
இதன்போது அவரை பின்தொடர்ந்து சென்ற இரண்டு புலனாய்வாளர்களால் அவரை தலைக்கவசத்தினால் (ஹெல்மெட்) தாக்கி கீழே விழுத்தி விட்டுத் தப்பித்து ஓடியுள்ளனர்.
இதன்போது பின்னாலே துரத்திச் சென்றபோது அங்கிருந்த பாடசாலை ஒன்றுக்கு அருகே நின்ற பொலிஸார் தனது கைத்துப்பாக்கியை எடுத்து சுடுவதற்கு முயற்சித்துள்ளார்.
இவ்வாறான செயற்பாட்டை மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம், எதிர்க்கின்றோம். மீண்டும் கூறுகின்றோம், உங்கள் துப்பாக்கிகளால் எங்கள் உரிமைக்கான தாகத்தைத் தணிக்கவோ அடக்கவோ முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |