தாக்குதல் தொடர்பில் உண்மையை வெளிபடுத்தினார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்(Video)
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை புலனாய்வாளர் தாக்கிச் சுட முயற்சி செய்ததாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக யாழ்.வடமராட்சி ஊடக இல்லத்தில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் விளையாட்டுக் கழக உறுப்பினர்களை சந்திப்பதற்க்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சென்று அங்கு விளையாட்டுக்கழக உறுப்பினர்களை சந்திக்க சென்றுள்ளார்.
இதன்போது சந்தேகத்திற்கிடமான ஒருவர் அங்கு நடமாடிக் கொண்டிருந்த வேளை அதனை அவதானித்த நாடாளுமன்ற உறுப்பினரின் பகுப்பாய்வு அதிகாரி குறித்த நபரிடம் நீங்கள் யார் என கேட்டபோது தன்னை ஒரு புலனாய்வு அதிகாரி என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து பகுப்பாய்வு அதிகாரி குறித்த புலனாய்வு அதிகாரியிடம் உங்கள் அடையாள அட்டைையை காண்பிக்குமாறு கோரியுள்ளார்.
இதன்போது அங்கு சென்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம்குறித்த புலனாய்வு அதிகாரியிடம் அடையாள அட்டையை காண்பிக்குமாறு கோரிய வேளை கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் மீது தாக்குதல் நடத்தி துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி தப்பிச் சென்றுள்ளார்.
இந்நிலையில் அங்கு அவருடன் வருகை தந்திருந்த ஒருவரை பிடித்து அங்கு வந்த பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
