கஜேந்திரகுமாரோடு கைகோர்க்கும் வல்லமையை உண்டு பண்ணுவோம்: அடைக்கலநாதன் பகிரங்கம்
ஆட்சி அமைக்கும் போது ஜே.வி.பி உடனோ அல்லது எந்தவொரு சிங்களக் கட்சியிடனோ எங்களது உறவு இருக்க மாட்டாது. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தோடு இணைந்து செயற்படக் கூடிய வல்லமையை நாங்கள உண்டு பண்ணுவோம் என நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெனியிட்ட அவர்,
“தையிட்டி புத்தர் கோவில் பிரச்சனை தீர்கப்பட வேண்டும் எனில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாதாம்.
அதன் அர்த்தம் என்ன. வன்னி மண்ணில் விலை கொடுக்கப்பட்டுள்ளது. உயிர்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தலைவர்கள்
அந்த மண்ணில் இருக்கும் தமிழ் தலைவர்கள் ஜனாதிபதி உரையை விமர்சிக்க கூடது என பிபல் ரத்நாயக்க எவ்வாறு கூறமுடியும்.
வடக்கில் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்று விட்டால் நீங்கள் எதுவும் பேச முடியுமா.
ஜனாதிபதி தனது உரைகளில் ஆட்சியை கைப்பற்றக் கூடிய கதைகளை சொல்லுகின்ற போது அதை விமர்சிக்கின்ற தமிழ் தலைவர்களை வாய் மூட வேண்டும் என கூற உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது.
தேர்தல் விஞ்ஞாபனத்தில் அனைவரும் இலங்கையர் என்று சொன்னார்கள். அந்த சிந்தனை இப்போது எங்கே..?
தமிழர்கள் எதற்கு போராடினார்கள். எங்களது உரிமை, மண், தேசம் பாதுக்கப்படும் எனப் போராடினார்கள். அப்படிப்பட்ட தமிழ் தரப்பை பார்த்து நீங்கள் என்ன கூறுகிறீர்கள்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
ஆட்சி அமைக்கும் போது ஜேவிபியுடனோ அல்லது எந்தவொரு சிங்களக் கட்சியிடனோ எங்களது உறவு இருக்க மாட்டாது.
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தோடு இணைந்து செயற்படக் கூடிய வல்லமையை நாங்கள உண்டு பண்ணுவோம்.
ஏனென்றால் நாம் ஒற்றுமையை நேசிப்பவர்கள். சங்கு சின்னம் ஜனாதிபதி தேர்தலில் பொது சின்னமாக மாற்றம் பெறுகின்ற போது யாருமே சங்கு சின்னத் ஆதரிக்கவில்லை.
இதில் இருக்கின்ற கட்சிகள் மட்டும் தான் அதனை ஆதரித்தன. தமிழரசுக் கட்சி பெரும்பான்மை தலைவர்களை ஆதரித்தார்கள்.
மக்களை வாக்களிக்க வேண்டாம் அமைதி காணுங்கள என்றும் சொனனவர்கள் இருக்கிறார்கள்.
சங்கு சின்னத்தில் பொது வேட்பாளரை உருவாக்கி நாம் தான் செயற்பட்டோம் எனக் கூறுகின்றோம்.
ஆகவே ஒற்றுமையை கருதி எங்களுடைய ஆட்சி அமைக்கின்ற விதம் தமிழ் தரப்புடன் தான் இருக்கும். அற்ப சொற்றபத்திற்காக கண்டவர்களின் காலில் விழும் நிலை இல்லை என்பதை கூறுகின்றேன்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கத்தோலிக்க திருச்சபையின் கடைசித் தலைவராக போப் பிரான்சிஸ்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் தீர்க்கதரிசனம் News Lankasri

விஜய் டிவியின் தங்கமகள் சீரியலில் மாற்றப்பட்ட முக்கிய நடிகை.. அவருக்கு பதில் இவர்தானா, போட்டோ இதோ Cineulagam

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan
