சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தோனி : அணிக்கு புதிய தலைவர்
சென்னை சூப்பர் கிங் அணிக்கு புதிய தலைவராக இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் 2024 தொடர் நாளை (22.3.2024) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆரம்பமாக உள்ள நிலையில் இந்த அறிவிப்பு CSK ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதிய தலைவர்
எம்.எஸ். தோனி 2008 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உருவாக்கப்பட்டதில் இருந்தே இன்று வரை நிரந்தர அணித்தலைவராக அணியை வழிநடத்தி வந்துள்ளார்.
OFFICIAL STATEMENT: MS Dhoni hands over captaincy to Ruturaj Gaikwad. #WhistlePodu #Yellove
— Chennai Super Kings (@ChennaiIPL) March 21, 2024
இந்நிலையில், இந்த மாற்றம் மூலம் தோனியின் 13 ஆண்டுகால தலைமைப் பயணம் நிறைவுக்கு வந்துள்ளது.
மேலும், அணித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ருதுராஜ் கெய்க்வாட் 2019 ஆம் ஆண்டு முதல் சென்னை அணியில் இடம்பெற்று, இதுவரை 52 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
எனவே ருதுராஜ் கெய்க்வாட் சிறந்த ஒரு தேர்வாக அமைவார் என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பல்லவனை தள்ளிவிட்டு கொச்சையாக பேசிய வானதி அண்ணன்... அய்யனார் துணை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
