ஜி20 மாநாட்டுக்கு அழைப்பு: மோடிக்கு பதில் வழங்கிய புடின்
இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஜி20 மாநாட்டில் பங்கேற்க இயலாதது குறித்து பிரதமா் நரேந்திர மோடியிடம் ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீா் புதின் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலாக ரஷ்ய தரப்பில் வெளியுறவு அமைச்சர் சொ்கேய் லாவ்ரோவ் பங்கேற்பாா் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியா தலைமை வகிக்கும் நிகழாண்டுக்கான ஜி20 உச்சி மாநாடு, வரும் செப்டம்பா் 9, 10-ஆம் திகதிகளில் தலைநகா் தில்லியில் நடைபெற உள்ளது.
இதில் அமெரிக்க அதிபா் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக், சீன அதிபா் ஷி ஜின்பிங், சவூதி அரேபிய இளவரசா் முகமது பின் சல்மான் உள்ளிட்ட உலகத் தலைவா்கள் பங்கேற்க உள்ளனா்.
உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கை
அண்மையில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ‘பிரிக்ஸ்’ மாநாட்டில் புடின் பங்கேற்காத நிலையில், இந்தியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டிலும் அவா் பங்கேற்க மாட்டாா் என்பது தெரியவந்துள்ளது.
உக்ரைன் மீதான மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கை காரணமாக அவா் இந்த முடிவை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதேவேளை ஜி20 மாநாட்டில் தன்னால் பங்கேற்க இயலாதது குறித்தும், இந்த முடிவைப் புரிந்துகொண்டதற்கு பிரதமருக்கு நன்றியையும் அதிபா் புதின் தெரிவித்தாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.