யாழ்.வடமராட்சி ஹாட்லிக் கல்லூரியின் சிறந்த முடிவுகள்
வெளியான கா. பொ. த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளில் ஹாட்லிக் கல்லூரி மாணவன் அனுராகந்தன் விஸ்வகாந்தன் கணித பிரிவில் 3A சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதல் இடத்தையும் தேசிய ரீதியில் 12 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.
அதேவேளை உயிரியல் பிரிவில் சந்திரபாலா கதுசன் 3 A சித்திகளை பெற்று மாவடட மட்டத்தில் முதல் இடத்தையும் தேசிய ரீதியில் 20 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.
பொறியியல் தொழில்நுட்ப பாடத்தில் உமாபதி கிருஷாந்த் 2AB பெறுபெறுகளை பெற்று மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தினையும், தேசிய ரீதியில் 50 வது இடத்தினையும் பெற்றுள்ளார்.
சிறந்த பெறுபேறு
ஹாட்லிக் கல்லூரியில் கணித பிரிவில் மொத்தமாக 10 மாணவர்கள் 3 A, சித்திகளையும், 2 மாணவர்கள் 2A B சித்திகளையும் பெற்றுள்ளதுடன், உயிரியல் பிரிவில் 6 மாணவர்கள் 3A சித்திகளையும், 4 மாணவர்கள் 2A B சித்திகளையும் பெற்றுள்ளனர்.

அத்துடன் பொறியியல் தொழில்நுட்பத்தில் 12 மாணவர்களும், உயிரியல் தொழிலன்நுட்ப பாடத்தில் 2 மாணவர்களும், வர்த்தகத்தில் 5மாணவர்களும், கலை பிரிவில் 5 மாணவர்களும், ஏனைய பாடங்களில் ஒருமாணவனும் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.
இனி நாங்கதான் நார்மல்.. எல்லாரும் தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க: டோரதி சர்ச்சைக்கு கார்த்திக் சுப்புராஜ் பதில் Cineulagam
அட்டகத்தி தினேஷின் காதலி இவர்தானா? ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய பிரபல தொகுப்பாளினியின் பதிவு! Manithan
லொட்டரியில் விழுந்த ரூ.8,700 கோடி ஜாக்பாட் - ஒரு மாதம் கழித்து பரிசை வாங்கிய வெற்றியாளர் News Lankasri