அரச நிறுவனங்களின் நிதி விபரங்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
அமைச்சகங்கள், திணைக்களங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் என்பன, ஒருங்கிணைந்த நிதிக்கு (Conolidated Fund) வெளியே வைத்திருக்கும் நிதியின் விபரங்களை திறைசேரி கோரியுள்ளது.
அமைச்சுச் செயலாளர்கள், விசேட செலவினப் பிரிவுகளின் தலைவர்கள், திணைக்களத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள், கூட்டுத்தாபனங்கள், பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்களின் தலைவர்களுக்கு சுற்றறிக்கையின் மூலம், திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன இந்த விபரங்களை கோரியுள்ளார்.
பொது நிதி
அத்துடன், ஒருங்கிணைந்த நிதிக்கு புறம்பாக, எந்தவொரு பொது நிதியையும் குறித்த நிறுவனங்கள் வைத்திருக்க முடியாது என்று அவர் அந்த சுற்றறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
பல்வேறு பொது நிறுவனங்களின் கீழ் கணிசமான எண்ணிக்கையிலான சட்டப்பூர்வ மற்றும் சட்டப்பூர்வமற்ற நிதிகள் இருப்பதாக தெரியவந்ததை அடுத்தே இந்த பணிப்புரை வந்துள்ளது.
தற்போதுள்ள சட்டப்பூர்வமற்ற நிதிகள் செயல்பாடுகளைத் தொடர அவசியமானதாகக் கருதப்பட்டால், சம்பந்தப்பட்ட அமைச்சகச் செயலர், அத்தகைய நிதியைத் தொடர்வதற்கான காரணங்கள் மற்றும் நியாயங்களை திறைசேரியின் செயலாளருக்கு அறிவிக்க வேண்டும் என்றும் திறைசேரியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.





ரூ.30,000 கோடி மதிப்புள்ள சோனா குழுமம்: கொலை செய்யப்பட்டாரா சஞ்சய் கபூர்? கடிதத்தால் வெடித்த சர்ச்சை! News Lankasri

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan
