மதுபான உரிமங்களை வழங்கும் திட்டத்திற்கு பணம் அறவீடு - புத்திக பத்திரண
பல்பொருள் அங்காடித் தொடர்களுக்கு, மதுபான உரிமங்களை வழங்கும் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது. இதற்காக ஒவ்வொரு விண்ணப்பதாரரிடமிருந்தும் 70 மில்லியன் பணம் அறவிடப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண(Buddhika Pathirana) இன்று குற்றம் சுமத்தியுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பின் போது இந்த தகவலை வெளியிட்ட பத்திரன, ஒவ்வொரு வாக்காளர் பிரிவுகளிலும் உள்ள பல்பொருள் அங்காடிகளுக்கு மது உரிமம் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகக் கூறியுள்ளார்.
மதுபான உரிமங்களிலிருந்து பெறப்படும் நிதியின் ஒரு பகுதி அந்த பிரதேச நாடாளுமன்ற உறுப்பினருக்கு அல்லது முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அல்லது ஒவ்வொரு தொகுதியிலும் ஆளும் கட்சியின் அமைப்பாளருக்கு வழங்கப்படும்.
நிதியின் மற்றொரு பகுதி பௌத்த மதகுருமார்கள் உட்பட மதுபான உரிமங்கள் வழங்கப்படுவதை எதிர்ப்பவர்களுக்கு லஞ்சம் கொடுக்கப் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் பு
த்திக பத்திரன குற்றம் சுமத்தியுள்ளார்.
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri