முழு உரிமைகொண்ட காணி உறுதிப்பத்திரம் வழங்கப்படும் : ஜனாதிபதி அறிவிப்பு

Ranil Wickremesinghe Sri Lankan Peoples Sri Lanka Government
By Sheron Nov 26, 2023 12:15 AM GMT
Report

அனுமதிப்பத்திரம் பெற்ற காணி உரிமையாளர்களுக்கு முழு உரிமைகொண்ட காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவு, நாடு முழுவதும் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மாத்தளை மாவட்ட பிரதேச அரசியல் பிரதிநிதிகளுடன் நேற்றையதினம் (25.11.2023) இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி சுதந்திர தினத்திற்கு இணையாக நாடு முழுவதும் இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முழு உரிமைகொண்ட காணி உறுதிப்பத்திரம் வழங்கப்படும் : ஜனாதிபதி அறிவிப்பு | Full Ownership Land Deed Will Be Issued Feb 2024

இந்த காணி உறுதிப்பத்திர செயற்பாடுகளை மாவட்ட அபிவிருத்திக் குழுக்களிடம் ஒப்படைக்குமாறு பணிப்புரை வழங்கியுள்ளதோடு இந்த திட்டத்திற்கு அனைவரின் ஆதரவையும் எதிர்பார்ப்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

யாழிலிருந்து வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றவருக்கு நேர்ந்த துயரம்

யாழிலிருந்து வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றவருக்கு நேர்ந்த துயரம்

நில மேம்பாட்டுச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அனைத்து நில உரிமங்களும் காணி உறுதிப் பத்திரங்களாக மாற்றப்படுவதோடு அதன் முதல் கட்டமாக தம்புள்ளை விளையாட்டரங்கில் 10,000 காணி உறுதிகள் வழங்கப்படும். என தெரிவித்துள்ளார்.

அத்துடன், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் கீழ் வழங்கப்பட்ட காணிகளுக்கான உறுதிப் பத்திரங்களை கொழும்பில் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம்

இதேவேளை மலையகத்தில் அபிவிருத்தி செய்யப்படாத பிரதேசங்களின் அபிவிருத்திக்காக ஒவ்வொரு பிரதேச செயலகத்திற்கும் தலா 10 மில்லியன் ரூபா வழங்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

முழு உரிமைகொண்ட காணி உறுதிப்பத்திரம் வழங்கப்படும் : ஜனாதிபதி அறிவிப்பு | Full Ownership Land Deed Will Be Issued Feb 2024

நாட்டில் மிகப்பெரிய விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அதன் முதல் படி உரிமையாகும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கட்டம் கட்டமாக விடுவிக்கப்படும் பணயக்கைதிகள் : மேலும் 42 பாலஸ்தீனர்களை விடுதலை செய்யும் இஸ்ரேல்

கட்டம் கட்டமாக விடுவிக்கப்படும் பணயக்கைதிகள் : மேலும் 42 பாலஸ்தீனர்களை விடுதலை செய்யும் இஸ்ரேல்


இந்த சந்திப்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க, மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் கமகே, நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக பண்டார தென்னகோன், மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார கோட்டேகொட, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க. , மத்திய மாகாண சபைத் தலைவர் எல். டி.நிமலசிறி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US