எரிபொருள் மானியம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள முக்கிய தீர்மானம்
நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான எரிபொருள் மானியத்தை வழங்குவதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக கடற்றொழில் பிரதியமைச்சர் ரத்ன கமகே(Rathna Gamage) தெரிவித்துள்ளார்.
காலி - ஹபராதுவ பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் மானியம்
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
“குறித்த மானியங்களை எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

சிறு தொழிலாக கடற்றொழிலில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களுக்கும் நெடுநாள் படகு உரிமையாளர்களுக்கும் குறித்த எரிபொருள் மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் மானியத்தை எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னதாக செலுத்துவதற்கு எதிர்பார்க்கிறோம்.
அதேநேரம், கடற்றொழிலில் ஈடுபடுபவர்களின் உபகரணங்களின் விலை அதிகமாக உள்ளது.
குறித்த விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
தொடர் தோல்வி, ஆனாலும் முயற்சியை கைவிடாத ஷங்கர்.. ரூ. 1000 கோடியில் உருவாகும் பிரம்மாண்ட படம் Cineulagam
இந்தியாவுக்கு வரும் புடின்: விமானத்தில் கொண்டு வரப்பட்ட Aurus Senat கார்! மிரட்டும் தனித்துவம் News Lankasri