குறைந்த பட்ச அதிகாரத்தை பயன்படுத்துமாறு பொலிஸாருக்கு ஆலோசனை
எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்துக்கொள்ளும் நபர்கள் சம்பந்தமாக குறைந்த பட்ச அதிகாரத்தை பயன்படுத்துமாறு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இராணுவத்தின் உதவியும் பெற்றுக்கொள்ளப்படும்
எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகில் ஏற்படும் குழப்பகரமான சம்பவங்களை தடுத்து சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில் இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தேவையான சந்தர்ப்பங்களில் பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவத்தின் உதவியையும் பெற்றுக்கொள்ள அமைச்சு தீர்மானித்துள்ளது.
அமைதியான ஆர்ப்பாட்டங்கள்
எவ்வாறாயினும் அமைதியான ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்புகளுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டாம் எனவும் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் அத்துருகிரிய பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் பொலிஸாருக்கும் பொது மக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டதுடன் அதில் பொலிஸார் காயமடைந்தனர்.